80 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு - deer video
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி :நெல்லையில் நீர் தேடி சென்ற புள்ளிமான் 80 அடி கிணற்றில் விழுந்து தவித்த நிலையில் வனத்துறையினர் புள்ளிமானை பத்திரமாக மீட்டனர்.
வல்லவன்கோட்டை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளிமான் கிடப்பதை கண்ட தோட்டத்தின் உரிமையாளர் உடனடியாக சீதபற்பநல்லூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். காவல் துறையினர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனத்துறையினர் அந்த மானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கோடை காலம் என்பதால் 80 அடி ஆழமான கிணற்றில் கடும் வறட்சியால் மிகக்குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் இருந்துள்ளது. இந்த நிலையில் தவறி விழுந்த புள்ளிமானை கயிறு கட்டி இறங்கி வனத்துறையினர் மீட்டனர்.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்து எதிர்பாராத விதமாக 80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். கிணற்றில் விழுந்த புள்ளிமான் லேசான காயம் அடைந்த நிலையில் இருந்துள்ளது. பின்னர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்தில் பத்திரமாக விடப்பட்டது.