அம்பாசமுத்திரம் அருகே குடியிருப்புப்பகுதியில் சுற்றித்திரிந்த கரடியால் பொதுமக்கள் பீதி! - வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குள் உள்ளன. இவை அவ்வப்போது மலை அடிவாரத்திலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகின்றது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கரடி சுற்றிவந்த நிலையில், கோட்டைவிளைப்பட்டி மற்றும் முதலியார்பட்டி இணைப்பு சாலையில் இரவு நேரங்களில் கரடி, தன் இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்தவாறு சாலையில் சுற்றித்திரிந்துள்ளது. இந்தக் காட்சியைப் பார்த்த அப்பகுதியில் சென்றவர்கள், தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
குட்டியுடன் இரவு நேரங்களில் சுற்றித் திரியம் தாய்க் கரடியால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் முன், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பெண் ஒருவர் அதிகாலையில் கரடியால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐசிசி உலகக்கோப்பையில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது!