மீண்டும் பொங்கல் வாழ்த்து மடல்.. புதுச்சேரி மாணவர்கள் அசத்தல்! - பொங்கல் திருநாள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-01-2024/640-480-20490380-thumbnail-16x9-pud.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jan 12, 2024, 1:29 PM IST
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் திரு.வி.க அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி, ஆசிரியர் அன்பழகனின் துணையுடன், மாணவர்கள் அனைவரும் பொங்கல் வாழ்த்து மடலை தங்கள் கையாலே தயாரித்து, அதில் பல வண்ண ஓவியங்களை வரைந்து, அட்டையின் உள்ளே பொங்கல் வாழ்த்து கவிதையும் எழுதி, தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைவரும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை தம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பும் வழக்கம் இருந்தது. அந்த பொங்கல் வாழ்த்து அட்டைகள் விலைக்கு தகுந்தாற்போல் பல வகைகளில், பல வண்ணப் படங்களுடன் கடைகளில் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொங்கல் பண்டிகை நேரத்தில், ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்களும் யாராவது பொங்கல் வாழ்த்து அனுப்பியுள்ளார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் கடந்து, எஸ்.எம்.எஸ் வழியாக ஆரம்பித்து வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற இணைய ஊடகங்கள் வழி அனுப்பும் வழக்கம் வந்துவிட்டது. இதனால் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் குறைந்துவிட்டது என்றே கூறலாம்.