VIDEO:pongal festival: தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம் - Tourism in Theni on the occasion of Pongal holiday
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதுண்டு. இந்நிலையில் தொடர் பொங்கல் விடுமுறையாலும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இன்று(ஜன.17) காணும் பொங்கல் என்பதால் கும்பக்கரை அருவிக்கு காலை முதல் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மேலும் குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் குளித்து விட்டு தாங்கள் கொண்டு வந்துள்ள உணவு வகைகளை உண்டு மகிழ்ந்து, காணும் பொங்கலை கும்பக்கரை அருவியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST