சென்னையில் பாதசாரிகளுக்கு இடையூறு செய்தால் தக்க நடவடிக்கை - போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை - Greater Chennai police
🎬 Watch Now: Feature Video
சென்னையின் பல்வேறு சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பாதசாரிகள் செல்ல முடியாத அளவிற்கு, தள்ளு வண்டி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சாலைகளில் தனி நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் பலர் வாகனங்களை நிறுத்தி வைப்பதால், பாதசாரிகள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாதையில் செல்ல முடியாமலும், வாகனங்கள் எளிமையாக செல்ல முடியாமலும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் இணையதளம் வாயிலாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சென்னையில் முழுவதுமாக 164 பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் செல்ல ஏதுவாக மாற்றி அமைத்து தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுமக்கள், சாலைகளில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் செல்வதற்கு கடைகள் அமைத்தோ அல்லது வாகனங்களை நிறுத்துவதோ இருந்தால், அது குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் பகுதியின் விவரங்களை தெரிவித்தால், உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.