ஈரோட்டில் களைகட்டிய இயற்கை உணவு கண்காட்சி; பார்வையாளர்களைக் கவர்ந்த பாரம்பரிய உணவு வகைகள்!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 17, 2023, 5:31 PM IST
ஈரோடு: இயற்கையான பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கும் வகையில் ஈரோட்டில் இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது. இதில் இடம் பெற்று இருந்த ஏராளமான பாரம்பரிய உணவு வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஈரோடு திண்டல் தனியார் கல்லூரியில் “மண் மணம்” என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது. இது பாரம்பரிய இயற்கை உணவுகளை மீட்டெடுக்கும் வகையில் இயற்கை உணவு மற்றும் கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சியாக அமைந்து இருந்தது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எள் உருண்டை, கம்பு உருண்டை, சோளம், கருப்பு பீன்ஸ், கவுனி அரிசி, பச்சை பயிர், பாரம்பரிய நெல் விதைகள், பீட்ரூட் கேரட் பிஸ்கெட் போன்ற உணவுப் பொருட்கள், பாரம்பரிய தாவர விதைகள் மற்றும் கைகளால் செய்யப்பட்ட எண்ணெய் வகைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மேலும், கண்காட்சியில் குழந்தைகளின் கும்மியாட்ட நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்ததால் பார்வையாளர்கள் அவற்றைக் கண்டு கழித்தனர்.