குன்னூர் சிம்ஸ் பூங்காவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி..!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: கோடை விடுமுறையைச் செலவிட நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் குதுகலமாக்கும் வகையில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக தேயிலை பற்றி பொது மக்களுக்குத் தெளிவு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தேயிலை கண்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியை நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை போன்ற துறைகள் ஒன்றிணைந்து நடத்துகின்றன.
வரும் மே 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி நடைபெறவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இரு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியைத் தென் இந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சுற்றுலாத் துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து அரங்குகளைப் பார்வையிடுகின்றனர்.
மே 21 அன்று அகில உலக தேயிலை தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொது மக்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கலப்படமில்லா தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தேயிலை கண்காட்சி நடைபெற உள்ளது.