குன்னூரில் ராணுவ ஆயுத கண்காட்சி… ஆச்சரியத்தில் கண்டு ரசித்த பள்ளி மாணவர்கள்! - இந்திய ராணுவம்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 30, 2023, 9:00 AM IST
நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பாக ஆயுதக் கண்காட்சி நடைபெற்றது.
ராணுவ மைய தலைவர் கமாண்டன் யாதவ் தலைமையில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில் நேற்று (அக். 29) ஆயுதக் கண்காட்சி நடைபெற்றது. இதில் நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், ஸ்னைப்பர் மற்றும் போர்க் களங்களில் பயன்படுத்தும் உடைகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
இதில் வெலிங்டன் பகுதி பள்ளி மாணவ மாணவியர்கள் கண்காட்சியை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், "தங்களுக்கு இது போன்ற கண்காட்சியை காண்பதற்கு ஏற்பாடு செய்த வெலிங்டன் ராணுவ மையத்திற்கு நன்றி தெரிவிப்பதாக" கூறினர். மேலும் வரும் காலங்களில் இந்திய ராணுவத்தில் பணிபுரிய அதிக ஆர்வம் உள்ளதாகவும் தற்போது உள்ள நவீன ரக துப்பாக்கிகளை போர்க் களங்களில் கையாளுவது குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கிக் கூறியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.