நம்மாழ்வார் பிறந்தநாள்: உடல் முழுவதும் சேறு பூசி இயற்கை விவசாயிகள் கொண்டாட்டம்! - சேறு பூசி இயற்கை குளியல்
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: திமிரி அடுத்த விலாரி கிராமத்தில், இன்று நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் தங்களது உடல் முழுவதும் மண் சேறு பூசி மண் திருவிழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
விலாரி கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுடன் ஏராளமானோர் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இயற்கை விவசாயிகளின் சார்பில் இன்று நம்மாழ்வார் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மண் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாயிகள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் காரைக்காலைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஞானப்பிரகாசம் பங்கேற்றார்.
விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள மண்ணிற்கு மரியாதை செலுத்தும் வகையில், விவசாய நிலங்களில் தண்ணீர் நிரப்பி சேற்றைக் குழைத்து தங்களது உடல் முழுவதும் பூசிக்கொண்டு இயற்கை குளியல் போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நம்மாழ்வார் உருவப்படத்திற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலையை அணிவித்து வழிபட்டனர். இந்த திருவிழாவில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளின் பொது மக்களுக்குக் காட்சிப்படுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: புனித வெள்ளி : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!