யானை துரத்தியதில் படுகாயமடைந்த விவசாயி - நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ ஜி.கே. மணி - யானை துரத்தியதில் படுகாயமடைந்த விவசாயி
🎬 Watch Now: Feature Video

தருமபுரி: பாலக்கோடு, சோமனஹள்ளி உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக இரண்டு காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து நிலங்களை சேதம் செய்து வருகிறது.
பாலக்கோடு ஏர்ரணஅள்ளி கிராமத்தைச் சார்ந்த மாணிக்கம் என்பவரை காட்டு யானை தும்பிக்கையால் தாக்கியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணிக்கத்தை பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST