கொள்ளை அடிக்க முடியாத ஆத்திரத்தில் டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த நபர்கள்!
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையையடுத்த சந்திரகிரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் அரசு டாஸ்மார்க் கடை பார் வசதியுடன் இயங்கி வருகிறது.தற்போது அந்த பார் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுப்பதற்காக முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் ஆத்திரத்தில் கடையை உடைத்துத் திருட முடியவில்லை என்பதால் டாஸ்மாக் பகுதியில் ஆங்காங்கே கீழே கிடந்த அட்டைப்பெட்டிகளை எடுத்துச் செயல்படாமல் இருக்கும் பார் மேற்கூரை மீது வீசி தீ வைத்து விட்டுத் தப்பி ஓடி உள்ளனர்.இதில் செயல்படாத பார் முற்றிலுமாக தீ பற்றிக் கருகி சேதம் அடைந்துள்ளது.
இந்நிலையில்,இன்று காலை கடையைத் திறக்க வந்த டாஸ்மார்க் ஊழியர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்,ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஒட்டப்பிடாரம் போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
மேலும் டாஸ்மாக் கடையிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டும் ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மர்ம நபர்களின் திருட்டு முயற்சி தோல்வி அடைந்ததால் டாஸ்மாக் கடையிலிருந்த 5 லட்ச ரூபாய் தப்பி உள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு