கார் உதிரிபாகம் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - fire accident at car parts factory in Kanchipuram
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சிப்காட் பகுதியில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று (மே.19) உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் காருக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST