தண்ணீர் வடியாத கொரட்டூர் ரயில்வே சுரங்கம்! - ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியது
🎬 Watch Now: Feature Video
Published : Dec 7, 2023, 5:03 PM IST
சென்னை: கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னையின் பல பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டது. இந்த மழை ஏற்படுத்திய வெள்ளம் நகர் முழுவதும் சூழ்ந்த நிலையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
மழை நின்று 3 நாட்கள் கடந்தும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனை சீர் செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்து வந்த மழையால் கொரட்டூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் இதனால் கொரட்டூர் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை முழுவதுமாக மூழ்கி குலம் போல காட்சி அளிக்கிறது.
இதனால் பாடியிலிருந்து கொரட்டூர் பகுதிக்கு செல்லும் மக்கள் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் ஆபத்தான முறையில் ரயில்வே பாதையை கடந்தும் சென்று வருகின்றனர். மழை நின்று மூன்று நாட்களாகியும் தற்போதுவரை இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.