Dharmapuri municipality meeting: தருமபுரி நகராட்சி அதிகாரிகளால் ஆட்சிக்கு கெட்ட பெயர் - திமுக நகர மன்ற உறுப்பினர் பேச்சு - திமுக அரசு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 5:25 PM IST

தருமபுரி: தருமபுரி நகராட்சியின் நகர் மன்றக் கூட்டம் இன்று (22.08.2023) அறிஞர் அண்ணா நகர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் லட்சுமி தலைமையில் நகராட்சி ஆணையாளா் புவனேஷ்வரனின் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி நகராட்சியின் 25வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 230க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் முறையான கழிப்பிட வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இது குறித்து கடந்த 18 மாதங்களாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளால் திமுக அரசுக்கு தான் கெட்ட பெயர் வருவதாக கூட்டத்தில் கலந்துகொண்ட தருமபுரி நகராட்சி 25 வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் சத்தியா முல்லைவேந்தன் கூறியுள்ளார்.

எனவே துரிதமாக நடவடிக்கை எடுத்து 10 நாட்களில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த 23 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் நாகராஜன் பேசும்போது, “எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த வேலையும் நடைபெறவில்லை. 

நான் பதவி ராஜினாமா செய்தால் எனது வார்டு உட்பட பகுதியில் வேலை செய்வீர்களா? வேலை செய்வதாக உறுதி அளித்தால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார். இதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் அதிமுகவை சார்ந்த வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் எந்தவித பணியும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.