சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு 5 பிரிவுகளாக நடைபெற்ற சதுரங்க போட்டி! - today news in tamil

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 17, 2023, 1:54 PM IST

தென்காசி: கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு சதுரங்க போட்டி கல்லூரி வளாகத்தில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை கல்லூரி முதல்வர் முனைவர் குமரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பிரேமா அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர் பாலீஸ்வரன் சதுரங்க போட்டியை துவக்கி வைத்தார்கள்.

இப்போட்டி 9 வயதுக்குட்பட்டோர், 11 வயதுக்குட்பட்டோர், 14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் மொத்தம் 247 மாணவர்கள் கலந்து கொண்டு சதுரங்கம் விளையாடினர். தென்காசி மாவட்ட சதுரங்க தலைவர் பெருமாள் மற்றும் கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் ரேவதி பாலீஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

9 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கிருத்திக் ரோஷன் முதலிடமும், சுபா பொண்ணேஸ் இரண்டாமிடமும், பிரஜித் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவிகள் பிரிவில் நந்திதா ரேணுகா முதலிடமும், இனியா இரண்டாமிடமும், த்ரீ ஃபோர்சா லீனஸ் மூன்றாமிடமும் பெற்றனர்.

11 வயதுக்குடோருக்கான போட்டியில் ஹரிஹரன் முதலிடமும், அகமது இர்சத்  இரண்டாமிடமும்,  ஹரிஷ் லிங்கம் மூன்றாமிடமும், பெண்கள் பிரிவில் லக்ஷரா முதலிடமும், ரோஸ்லின் பிரியா இரண்டாமிடமும், நவியா மூன்றாமிடமும் பெற்றனர். 14 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் அனீஸ் முதலிடமும், ஜெய்சன் சொலின் இரண்டாமிடமும், மகாராஜா ஈஸ்வரன் மூன்றாமிடமும், பெண்கள் பிரிவில் நித்யஸ்ரீ முதலிடமும் பரணி இரண்டாமிடமும், ஆர்யா கிருஷ்ணன் மூன்றாமிடமும் பெற்றனர்.

17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் சாய் ஸ்ரீ சரண் முதலிடமும், ஹமீத் யூசுப் இரண்டாமிடமும், முத்துக்குமரேசன் மூன்றாமிடமும், பெண்கள் பிரிவில் சுபாஷ் ஸ்ரீ முதலிடமும், பேச்சுப்பிரியா இரண்டாமிடமும், லக்சரா மூன்றாமிடமும் பெற்றனர்.

கல்லூரிகள் மாணவர்களுக்கான போட்டியில் ஹரிஹரன் முதலிடமும், இஸ்மாயில் மைதீன் இரண்டாமிடமும், தமிழ் சாரதி மூன்றாமிடமும், பெண்கள் பிரிவில் விஜயஸ்ரீ முதலிடமும், சகிக்கா அசிஸ் இரண்டாமிடமும், சுப செல்வி மூன்றாமிடமும் பெற்றனர்

இப்போட்டியில் வேலாயுதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், மேலகரம் அரசு பள்ளிக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.