Viral CCTV - மதுபோதையில் உணவகத்தை சூறையாடிய இளைஞர்கள்! - உணவகத்தை சூறையாடிய இளைஞர்கள்
🎬 Watch Now: Feature Video
தென்காசி: குற்றாலம் மெயின் அருவிக்குச் செல்லும் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு கடந்த 31ஆம் தேதி இரவு காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மதுபோதையில் உணவு அருந்த சென்றுள்ளனர். கடையில் உணவு இல்லை எனக் கூறியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் ஹோட்டலை சூறையாடினர். இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:40 PM IST