பட்டபகலில் பரபரப்பான சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - crime news
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கடைவீதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறித்த சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. கோயம்புத்தூர் பொள்ளாச்சி கடைவீதியில் நேற்று (ஜூலை 24) காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றனர்.
திடீரென செயினை பறித்ததில் அதிர்ச்சி அடைந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைக் கண்ட அப்பகுதியில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்தச் சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளனர். தகவலின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பட்டபகலில் பரபரப்பான சாலையில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.