பஸ் டே கொண்டாடிய மாணவ, மாணவிகள் மீது வழக்குப்பதிவு
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தடையை மீறி பஸ் டே கொண்டாடிய மாணவ, மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போலீசார் கண்முன்னே நேற்று (மார்ச் 30) தடையை மீறி பஸ் டே கொண்டாடியும், பேண்டு இசைக்கு ஏற்பாடு செய்து குத்தாட்டம் போட்டும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கல்லூரி மாணவ, மாணவிகள் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆரணி கிராமிய போலீசார், பொது வழியில் உத்தரவை மீறுதல், அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக கும்பலாக கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தல், சாலையை மறித்தல், அபயகரமாக பயணம் செய்தல், சாலை விதிகளை மீறுதல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல ஒரு தனியார் பேருந்தும், பேண்டு வாத்தியம் இசைக்க பயன்படுத்தப்பட்ட டாடா ஏஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பேருந்து ஓட்டுநர் தயாளன் மற்றும் டாடா ஏஸ் ஓட்டுனர் சரவணன் ஆகிய 2 ஓட்டுனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவையின் ரூட்டு தலைவி.. பேருந்து ஓட்டும் ஷர்மிளா