Bullock cart race: தேனியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்! - சுருளிபட்டியில் நடந்த மாட்டு வண்டி பந்தயம்
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் மஞ்சக்குளம் அருள்மிகு கெளமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் மற்றும் மாட்டு வண்டிசாரதிகள் கலந்து கொண்டனர்.
தேன்சிட்டு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான் என 5 வகையான பிரிவுகளில் 140க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுத் தொகையாக ரொக்கப் பரிசு வழங்கினார்கள். இந்தப் போட்டியானது சுருளிபட்டியில் இருந்து சுருளி அருவி வரை 10 கி.மீ., தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது.
இதில் முதலில் கொடி வாங்கும் மாட்டுவண்டி மற்றும வண்டி ஓட்டும் சாரதிக்கு ரொக்கத் தொகை மற்றும் குத்துவிளக்கினை பரிசாக வழங்கி கௌரவித்தார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் மாட்டுவண்டி எல்கை போட்டியைக் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: Elephant video: 'இது எங்க ஏரியா உள்ளே வராத' - செல்லும் வழியில் நின்ற வாகன ஓட்டிகளைத் துரத்தியடித்த யானைகள்