BJP Annamalai padayatra: கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடிய அண்ணாமலை! - annamalai latest news
🎬 Watch Now: Feature Video


Published : Sep 13, 2023, 12:05 PM IST
திண்டுக்கல்: கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (செப். 12) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். கொடைக்கானல் நாயுடுபுரம் விநாயகர் கோயிலில் இருந்து பேரணியாக கே.ஆர்.ஆர் கலையரங்கம், பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் வந்தடைந்தார்
ஒருநாள் யாத்திரை நடைப்பயணத்தை முடித்த அவர், இரவு தங்கி இன்று அதிகாலை கோல்ஃப் (குழிப்பந்தாட்டம்) மைதானத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். எப்பொழுதும் தொண்டர் படை சூழ வலம் வரும் அண்ணாமலை, கட்சி பணிகளை தாண்டி கோல்ஃப் விளையாடியதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
இதையும் படிங்க: "ஊழலின் மொத்த உருவம் திமுக.. சிகை அலங்காரத்திற்காக தமிழ்நாட்டின் கடன் பயன்படுகிறதா?" - அண்ணாமலை குற்றச்சாட்டு!