அன்புமணி ராமதாஸ் கைது: தருமபுரியில் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் சாலை மறியல்! - என்எல்சி
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி பொதுமக்களின் விளைநிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி.யை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்ததைக் கண்டித்து தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு இருக்கிறது.
அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்ததைக் கண்டிக்கும் வகையில் தருமபுரியில் பாமக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் தலைமையில், சேலம் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 30க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து நான்கு ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ஒகேனக்கல் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.. காவிரியில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!