பெண் தவறவிட்ட 5 சவரன் நகையை மீட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. போலீசார் மரியாதை.. - ஒட்டன்சத்திரம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 27, 2023, 12:54 PM IST

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மா பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மனைவி பிருந்தா. இவர் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தங்கச்சியம்மா பட்டி நோக்கி செல்வதற்காக தனது குழந்தையுடன் கையில் கட்டப்பை வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தாராபுரம் சாலையில் சென்று உள்ளார்.

அப்போது அவர் வைத்திருந்த கட்டப்பை தவறி சாலையில் விழுந்து உள்ளது. இதை அறியாத பிருந்தா இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்று விட்டு பார்த்த போது தான் வைத்திருந்த இருந்த ஐந்து பவுன் நகை அடங்கிய கட்டப்பை காணாததை உணர்ந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிருந்தா உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்து உள்ளார்.

இந்த நிலையில் புகார் அளிக்க வந்த ஒரு சில நிமிடத்திற்குள், ஒட்டன்சத்திரம் ஏபிபி நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற 60 வயதான முதியவர் பிருந்தா தவறவிட்ட நகையை எடுத்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் முன்னிலையில் ஒப்படைத்தார். இந்த நிலையில் காணாமல் போன நகையை ஆட்டோ ஓட்டுநரான காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு டிஎஸ்பி முருகேசன் அவர்கள் பொன்னாடை போர்த்தியும் அன்பளிப்பு வழங்கியும் கவுரவித்தார். இந்நிகழ்வில் ஆய்வாளர் ராஜசேகரன், சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, சவடமுத்து உள்ளிட்ட காவல் துறையினர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: தாலி கட்டிய கையோடு மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த புதுமாப்பிள்ளை!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.