திருப்பத்தூரில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட தாய், மகனுக்கு நேர்ந்த கொடுமை!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த மேலூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகன். இவருக்குச் சொந்தமாக அந்த கிராமத்தில் வீடு ஒன்று உள்ளது. மேலும் அந்த வீட்டின் அருகே தேவராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமா மணல் எடுத்து வந்ததில், சுமார் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டியுள்ளனர்.
அப்போது நீலமேகன் மனைவி செந்தாமரை மற்றும் அவரது மகன் இசையரசு ஆகிய இருவரும் பள்ளத்தைச் சமன் செய்யுமாறு பலமுறை கூறி வந்துள்ளனர். ஆனால் அவர்கள் அதனை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு வீட்டினுள் இருந்த செந்தாமரையை தேவராஜ் அவரது மகன் ராஜ்குமார் ஆகியோர் ஆபாசமாகப் பேசி தவறாக நடக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது செந்தாமரை கூச்சிலிட்ட போது அவரது மகன் இசையரசு சத்தம் கேட்டு வந்து தடுத்துள்ளார். பின்னர் ராஜ்குமார் மணல் மற்றும் மண் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சென்னகேசவன் மகன் ஹரிஷ், சுரேஷ், பவு, செந்தில் ஆகியோர் இசையரசை ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கியுள்ளனர்.
அப்போது உயிருக்குப் பயந்து பக்கத்தில் வீட்டில் தஞ்சம் புகுந்த செந்தாமரை மற்றும் இசையரசைக் கொலை செய்யும் நோக்கத்தில், வீட்டின் கதவு மற்றும் ஜென்னலை உடைத்து மீண்டும் சரமாரியாகத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். இதனையடுத்து இசையரசு மற்றும் செந்தாமரை பலத்த படுகாயங்களுடன் தற்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.