கோயம்பேடு மேம்பாலம் அருகே சாலையில் சென்ற காரில் தீ விபத்து! - Car accident
🎬 Watch Now: Feature Video
சென்னை: கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம் நோக்கி 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பின்னர், காரை ஓட்டி வந்த அன்பரசு என்பவர் கார் எரிவதைக் கண்டு காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காரை அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், ஜே.ஜே. நகர் தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.