குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 77வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாட்டம்!
🎬 Watch Now: Feature Video
Published : Oct 27, 2023, 2:07 PM IST
நீலகிரி: கடந்த 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முதல் காலாட்படையினர் ஜம்மு மற்றும் காஷ்மீர் நகரில் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, எதிரிகளிடம் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். இத்தகைய இந்திய காலாட்படையின் வீரச்செயலைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் காலாட்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், 77வது காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் ராணுவ இசை முழங்க, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த விழாவில் காலாட்படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ் மற்றும் ராணுவப் படை, விமான படை, கப்பல் படை ஆகிய அதிகாரிகள் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து, ராணுவ மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உயிர்நீத்தம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.