குமரியில் குடியிருப்பு பகுதியில் சிக்கிய 15 அடி நீள ராஜ நாகம்! - forest department
🎬 Watch Now: Feature Video


Published : Oct 22, 2023, 11:39 AM IST
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை அடிவாரப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள், ஊர்வனங்கள் உள்ளிட்டவை சமீப காலமாக புகுந்து வருகின்றன. அந்த வன விலங்குகளை வனத்துறையினர் பிடித்து, அடர்ந்த வனப் பகுதியில் விடுவது வாடிக்கையாகி உள்ளது.
இந்த நிலையில், பெருஞ்சாணி அணைப் பகுதியை ஒட்டி உள்ள பஞ்ச கன்னி அம்மன் கோயில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மிகப்பெரிய பாம்பு ஒன்று கால்வாய் கரையோரத்தில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளி மலை சரக வனத்துறையினர், கரை ஓரத்தில் நெளிந்து கொண்டிருந்த சுமார் 15 அடி நீளம் கொண்ட கொடிய விஷம் உடைய ராஜ நாகத்தை நீண்ட நேரம் போராடி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட ராஜ நாகத்தை, காளி கேசம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது.