ஆட்டம் காட்டிய ராஜ நாகம்... அலேக்கா பிடித்த தீயணைப்பு வீரர்கள்..! - தென்காசி தீயணைப்புத் துறை
🎬 Watch Now: Feature Video
Published : Dec 5, 2023, 5:36 PM IST
தென்காசி: புளியரை அருகே உள்ள பகவதிபுரம் ரயில் நிலையம் அருகில் அண்ணாமலை என்பவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்ததாக வீட்டில் உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார். தீயணைப்புத் துறையினர் பகவதிபுரத்தில் உள்ள அண்ணாமலை வீட்டிலிருந்த பாம்பைப் பார்த்த போது அது ராஜநாகம் எனத் தெரிய வந்தது.
அந்த பாம்பைக் கையாளுவது மிகவும் கடினம் என்று உடனடியாக தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசனுக்குத் தகவல் தெரிவித்தனர். அவரது ஆலோசனையின் பேரில் தென்காசி மாவட்ட உதவி அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் தீயணைப்புத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
மேலும் ராஜநாகம் சுமார் 15 அடி நீளமாக இருப்பதாலும், பாம்பு மிக வேகமாக இருந்ததாலும் அதனைப் பிடிக்கத் தீயணைப்புத் துறையினர் மிகவும் சிரமப்பட்டனர். பல மணி நேரம் போராடி சுமார் 15 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை லாவகமாகப் பிடித்தனர். பின்னர் அந்த ராஜநாகத்தை உடனடியாக செங்கோட்டை பகுதியில் உள்ள வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அந்த ராஜநாகத்தைக் கொண்டு சென்று மிகவும் பாதுகாப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர். மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் தீயணைப்புத் துறையினரும் வனத்துறையினரும் விரைந்து வந்து செயல்பட்டதற்குப் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: மிரள வைத்த மிக்ஜாம் புயல்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர்!