போட்டியை வென்ற கையோடு சக வீரருடன் கைகலப்பில் ஈடுபட்ட கேப்டன் பெப்பி
🎬 Watch Now: Feature Video
போர்ச்சுக்கல் பிரிமீயர் லீகா போட்டியில் வென்ற போர்டோ கால்பந்து அணியின் கேப்டன் பெப்பி, வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள சக வீரர் மமதோ லாம் அருகே வந்துள்ளார். ஆனால் பெப்பி, சக வீரர் மமதோவை தள்ளிவிடுவது போலவும், ஆவேசமடைந்து சண்டையிடுவது போலவும் ஒரு காணொலி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கேப்டன் பெப்பிக்கு மார்பு வலி ஏற்பட்டதாலேயே மமதோவை அவர் தள்ளிவிட்டார், இது சண்டையில்லை என அந்த அணி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.