Exclusive Video:ஒகேனக்கலில் தொங்கு பாலத்தின் மிக அருகே பாய்ந்தோடும் வெள்ளம்! - ஒகேனக்கல் தொங்கு பாலத்தை தண்ணீர் தொட்டு செல்கிறது
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மாலை நேர நிலவரப்படி இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார்கொட்டாய், உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். நீர்வரத்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக உள்ளதால் ஒகேனக்கல் தொங்கு பாலத்தை தண்ணீர் தொட்டுச்செல்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டு இரண்டு லட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் வந்தபோது தான் தொங்கு பாலத்தை நீர் தொட்டுச்சென்றது. ஒகேனக்கல் பகுதியில் உள்ள சினி அருவி, மெயின் அருவி, ஐவர் பவனி என அனைத்து அருவிகளும் நீரில் மூழ்கி உள்ளன. ஒகேனக்கல் பகுதியில் உள்ள பாறைகள் மூழ்கி, முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
dharmapuri