தொடர் மழை: மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு! - Heavy rain
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் டாப்ஸ்லிப் அடுத்த கேரளா வனப்பகுதியில் உள்ள 72 அடி உயரமும் 17.8 2 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதால் உபரிநீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஓரிரு தினங்களில் ஆழியார் அணையும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்பகுதி ஆழியாறு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.