செல்ஃபி எடுக்க ஆற்றில் இறங்கிய இளம்பெண்கள் வெள்ளத்தில் தவிப்பு: மீட்ட காவல் துறை! - மத்தியப் பிரதேச மாநிலம் சிந்தவாரா
🎬 Watch Now: Feature Video
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்தவாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு இளம்பெண்கள் ஜுன்னார்டியோவின் கேதி கிராமத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது பெஞ்ச் ஆற்றின் நடுவில் இரு மாணவிகள் செல்ஃபி எடுக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஆற்றின் நடுவில் இரு இளம்பெண்கள் சிக்கியுள்ளனர். இது குறித்து அந்த கிராம மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பாராங்கயிற்றைக் கொண்டு இரு இளம்பெண்களையும் மீட்டனர்.