மறைந்த மனிதநேயம்: உயிரிழந்த மனைவியின் உடலை தனியாக தூக்கிச்சென்ற கணவன்! - மனைவியின் உடலை தனியாக தூக்கிச்சென்ற கணவன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11547488-thumbnail-3x2-oxygen.jpg)
தெலங்கானாவில் உள்ள கமரெட்டி நகரில் நபர் ஒருவர் தனது இறந்த மனைவியின் உடலை இந்திராநகர் கல்லறைக்கு எடுத்துச்செல்லும் காணொலி வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாகலட்சுமி என்ற வீடில்லா பெண் நேற்று(ஏப்.25) உயிரிழந்த நிலையில் அவர் கரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என உதவ யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. அவரை உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்ல ஆட்டோ ஓட்டுநர்களும் முன்வரவில்லை. இதன் பிறகு ரயில்வே காவல்துறையினர் 2,500 ரூபாய் கொடுத்து உதவியுள்ளனர். இதனையடுத்து அந்நபர் தனது மனைவியின் உடலை தகனம் செய்ய தூக்கிச்சென்றுள்ளார்.