VIRAL VIDEO: தாலி கட்டுறது முன்னாடி இப்படி ஒரு பிரச்சினையா? - ராய்ப்பூர் திருமண விபத்து வீடியா
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்றுப் பரவல் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. இதனால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மீண்டும் பழையபடி நடைபெறுகின்றன. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று சொகுசு ஓட்டல் ஒன்றில் திருமண விழா நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மணமேடைக்கு மணமக்களை கிரேன் மூலம் கொண்டுவரப்பட்டனர். கிரேன் மெதுவாக இறங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென கிரேன் உடைந்ததில், மணமக்கள் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனையடுத்து, சற்றுநேரம் திருமணம் விழா தடைப்பட்டது. பின்னர், மீண்டும் திருமண விழா நடைபெற்றது. கிரேன் கீழே விழுந்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
Last Updated : Dec 14, 2021, 1:23 PM IST