இந்திய விமானப் படையின் சாகசத்தை வெளிப்படுத்தும் 'காக்பிட் காட்சி'... விமானப்படை வெளியிட்ட வீடியோ... - Cockpit view of IAF aircraft at grand Republic Day flypast
🎬 Watch Now: Feature Video
இந்திய முழுவதும் 73ஆவது குடியரசு தின விழா இன்று (ஜன.26) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையொட்டி இந்திய விமானப் படை வீரர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் வீரர்களின் சாகசத்தை (Cockpit view) காக்பிட் காட்சி எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விமான படை நடத்திய சாகச நிகழ்வானது விமானி அறையிலிருந்து முதல்முறையாக ஒளிபரப்பப்பட்டது. இதில், விமானப்படையின் 75 விமானங்கள் சாகச நிகழ்வில் பங்குபெற்றன. ரபேல், மிக்-29 உள்ளிட்ட விமானங்களின் இயக்கத்தை விமானி காக்பிட்டிலிருந்து எடுக்கப்பட்ட காணொலியை பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.