Republic day: தேசியக்கொடிக்கு மரியாதை செய்த நெல்லை கோயில் யானை! - விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண்
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஒரு சில கோயில்களில் மட்டும் கோயில் முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம்.
அதன்படி தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோயிலில் 74வது குடியரசு தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இக்கோயில் முன்பு விக்டோரியா மகாராணி வழங்கிய விளைக்குத்தூண் அருகே இந்தியத் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வாசல் முன்பு ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்குக் கோவில் யானை காந்திமதி, பிளிறல் சத்தத்துடன் மரியாதை செய்தது.
கோவில் நிர்வாக அதிகாரி அய்யர் சிவமணி கொடியேற்றி மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து மகா தீபாராதனையும் செய்தனர். மேலும் அங்கு இருந்தவர்களுக்குப் பிரசாதம் மற்றும் இனிப்புகளும் கொடுக்கப்பட்டது.