ETV Bharat / sukhibhava

காதில் வினோத சத்தம் கேட்கிறதா? காரணம் இதுதான்..! மருத்துவர்கள் கூறும் விளக்கம் - காதில் ஒலி

காதுக்குள் சத்தம் கேட்கிறதா.? என்னவாக இருக்கும்.? மாவீரன் படத்திற்கும் காதிரைச்சல் பிரச்சனைக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? இந்த செய்தித்தொகுப்பை படித்து பாருங்கள்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 17, 2023, 2:52 PM IST

Updated : Jul 17, 2023, 3:42 PM IST

ஹைதராபாத்: சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அந்த படத்திலும், படத்தின் ட்ரெய்லர் காட்சியிலும் ஹீரோவாக நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு, காதிற்குள் ஒரு சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்ட உடனேயே அவர் மேலே பார்ப்பார்.. அதனை தொடர்ந்து கதை எப்படி நகரும் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஆனால் அதேபோல் மக்கள் மத்தியில் பலருக்கும் காதுக்குள் சத்தம் கேட்கின்ற ஒரு நிகழ்வு நடக்கிறது என்றும், இந்த சத்தம் மாவீரன் படத்தில் வருவதுபோல் சம்மந்தபட்ட நபரை தவிர வெளியில் யாருக்கும் கேட்காது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். டின்னிடஸ் அதாவது காதிரைச்சல் என்ற ஒரு நிகழ்வு மக்களில் பலருக்கு ஏற்படுவதாகவும் அது இந்திய அளவில் சுமார் 15 சதவீதத்தில் இருத்து 20 சதவீதம் மக்களுக்கு ஏற்படுகிறது எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு நோயா என கேட்டால் அது கிடையாது. இந்த காதிரைச்சலால் பாதிக்ககூடிய நபருக்கு காதுக்குள் விசில் சத்தம், இரைச்சல் சத்தம், கூச்சல் சத்தம், இனம் புரியாத ஒரு சத்தம் என விதவிதமான ஒலி கேட்குமாம். இந்த காதிரைச்சல் எதனால் ஏற்படுகிறது? இதற்கு என்ன தீர்வு? உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பெங்களூருவை சேர்ந்த ENT அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ப்ரிதீக் நாயக் விளக்கம் கொடுத்துள்ளார்.

காதிரைச்சல் என்றால் என்ன? இது யார் யாருக்கு வரும்?

மருத்துவர் : டின்னிடஸ் அல்லது காதிரைச்சல் இது காதுக்குள் ஒரு வகையான சத்தத்தை உணர வைக்கும் நிகழ்வு. இது ஒரு காதில் மட்டுமோ அல்லது இரண்டு காதுகளிலுமோ ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு இந்திய அளவில் சுமார் 15 முதல் 20 சதவீதம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வயது முதிர்ச்சி அடைந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த காதிரைச்சல் பிரச்சனை காதுகேளாமைக்கு வழிவகுக்குமா?

மருத்துவர் : கண்டிப்பாக... இந்த காதிரைச்சல் பிரச்சனையை நீங்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டால் நாள்பட இந்த பிரச்சனை காதுகேளாமைக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனையால் பாதிக்கூடிய நபரின் காதுகளில் மென்மையாகவோ அல்லது அதீத சத்தமோ கேட்டுக்கோண்டே இருக்கும். இது ஆரம்பகட்டத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. ஆனால் நீங்கள் இதை கண்டுகொள்ளாமல் இருந்தால் கண்டிப்பாக காதுகேளாமை ஏற்படும்.

காதிரைச்சல் நோய் ஏற்பட காரணம் என்ன?

மருத்துவர்: காதிரைச்சல் பிரச்சனை ஒரு நோய் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இது செவிப்புலன்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான அறிகுறி. அதாவது, காது, செவிப்புலன் நரம்புகள் ஒலி அலைகளை உணர்வதற்கான மூளையின் பகுதியில் அசாதாரணம் ஏற்படும்போதுதான் காதுகளில் இரைச்சல் சத்தம் கேட்கும். இந்த அமைப்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய பிரச்சனையை கண்டறிந்து சரி செய்தால் போதுமானது.

காதிரைச்சல் பிரச்சனைக்கு வழி வகுக்கும் வேறு காரணிகள் குறித்து கூற முடியுமா?

மருத்துவர்: ஆரம்பத்தில் கூறியதபோல்.. காதிரைச்சல் பிரச்சனை பெரும்பாலும் வயதானவர்களைதான் அதிகம் பாதிக்கும். ஆனால் சிறியவர்களையோ அல்லது இளம் வயதுடையவர்களையோ பாதிக்காது என சொல்ல முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த காதிரைச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் முதியவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும். அதற்கு ஒரு காரணத்தை எடுத்துக்கூறலாம். அதாவது, அந்த குறிப்பிட்ட நபருடைய காதுகளில் மெழுகு போன்ற ஒரு படிவம் அதிகமாக சேரும். இந்த படிவம் காதின் துவாரங்களை அடைத்து தற்காலிக காதிரைச்சல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

  • அதேபோல், நம்மில் பலர் காதுகளை சுத்தம் செய்ய..பட்ஸ், பேனா முனை, பென்சில் அப்டீ இப்டி என கைகளில் கிடைக்கும் பொருட்களை காதுகளுக்குள் விட்டு, தங்களுக்கு தானே பிரச்சனையை உருவாக்கிக்கொள்கின்றனர். இதனுடைய படிவங்களோ அல்லது, அதன் அழுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளோ காதிரைச்சல் பிரச்சனைக்கு வழிவகுக்கும் .
  • அதீத சத்தம் கூட காதிரைச்சல் மற்றும் காதுகேளாமை பிரச்சனைக்கு வழிவகுக்கும் . நம் உள்காதில் உள்ள உணர்ச்சி செல்கள் ஒலியை மூளைக்கு கடத்திவிடக்கூடிய பணியில் முக்கிய பங்கு வகுக்கிறது. ஆனால் இந்த செல்கள் அதீத சத்தத்தால் பாதிக்கப்படும்போது காதிரைச்சல் பிரச்சனை கண்டிப்பாக ஏற்படும். மேலும் பலர், காதுகளில் ஹெட் செட் அணிந்து சத்தம் அதிகமாக வைத்து செல்ஃபோன்களில் பல மணி நேரம் நேரத்தை செலவிடுகிறார்கள். இது ஒரு அளவை கடக்கும்போது அந்த நபருக்கு இந்த காதிரைச்சல் பிரச்சனை ஏற்படலாம். அதேபோல், தொழிற்சாலைகள், கட்டுமானத் தளங்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கு இந்த காதிரைச்சல் பிரச்சனை ஏற்படலாம். அவர்கள் காதுகளுக்கு போதிய பாதுகாப்பு அணிகலன்களை அணிந்துகொண்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
  • அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து சளி பிடித்தல், காது தசைகளில் ஏதாவது வீக்கம், தலை மற்றும் கழுத்து நரம்புகளில் ஏற்படக்கபடிய கோளாறு, ஹார்மோன் மாற்றம் போன்ற பல காரணங்களால் கூட இந்த காதிரைச்சல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
  • கூடவே, அக்யூஸ்டிக் நியூரோமா எனும் நோய் மூளையின் உள்காது மண்டலத்தில் கட்டியை ஏற்டுத்தும். இந்த கட்டி காதினுடைய நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்யும். இதனால் காதிரைச்சல் மற்றும் காதுகேளாமை பிரச்சனை ஏற்படும். அது மட்டும் இல்லாமல், உடலில் சமநிலையற்ற உணர்வையும் அது ஏற்படுத்தும். இதனால் தலை சுற்றல், வாந்தி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட பிரச்சனை இருக்கும். இப்படி ஒரு சூழலை ஒரு நபர் சந்திக்கும்போது அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்.
  • அதேபோல், வேறு சில நோய்களுக்காக நாம் உட்கொள்ளக்கூடிய மருந்துகள் பக்க விளைவுகள ஏற்படுத்தும். அதில் ஒன்று காதிரைச்சல் பிரச்சனை.

காதிரைச்சல் மற்றும் காதுகேளாமை பிரச்சனையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மருத்துவர்: இந்த காதிரைச்சல் பிரச்சனை பொதுவாக வயது தொடர்பான காது கேளாமை, காதில் ஏற்படக்கூடிய காயம், காதின் உள்புறம் உள்ளிட்ட காதுமண்டலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளோடு தொடர்புடையது. இந்த நிலையை உருவாக்கக்கூடிய செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காதுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதீத சத்தங்களை தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் இருக்கும் சத்தத்தை தவிர்க்க காதுகளை பாதுகாக்கும் பட்ஸ்களை அணிய வேண்டும். காதிரைச்சல் பிரச்சனையை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும்

இதையும் படிங்க: தக்காளியில் ஆண்மை குறைவுக்கு மருந்தா! ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத் தகவல்!

Last Updated : Jul 17, 2023, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.