ETV Bharat / sukhibhava

ரொம்ப நேரம் உட்கார்ந்து வேல பார்த்தா பக்கவாதம் வருமா?... நிபுணர்கள் சொல்வது என்ன? - Latest health news in tamil

What causes of stroke in Tamil: நீண்ட நேர வேலை மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றால் பக்கவாதம் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீண்ட நேர வேலை மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றால் மாரடைப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 6:14 PM IST

லக்னோ: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை, உடற்பயிற்சியின்மை, புகைப்பிடித்தல், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது போன்றவற்றால் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. இதுவே இளைஞர்களுக்குப் பக்கவாதம் ஏற்படவும் காரணமாக உள்ளது.

கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (KGMU - King George's Medical University) நரம்பியல் துறையின் பேராசிரியர் ஆர்.கே கார்க், “40 முதல் 50 வயதுக்கு உட்பட்ட தொழில் வல்லுநர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காகக் கடுமையாகப் போராடுகிறார்கள். ஆகையினால் 45 வயதுக்குட்பட்டவர்களிடையே பக்கவாதம் அதிகமாகக் காணப்படுகிறது. வேலை செய்யும் அலுவலகத்தில் அதீத மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகின்றன. உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது” என்றார்.

மேலும், பக்கவாதம் திடீரென்று ஏற்படாது. முன்கூட்டியே பல அறிகுறிகள் தோன்றும். உதாரணமாக, முகம், கை, கால்களில் உணர்வற்று இருப்பது அல்லது பலவீனமாக இருப்பது, பேசுவதில் அல்லது ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம், திடீர் குழப்பம், ஒரு கண்களில் அல்லது இரண்டு கண்களில் பார்ப்பதில் சிரமம், தலைச் சுற்றல், கடுமையான தலைவலி போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். வேலைப் பளு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து எளிமையாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று கூறினார்.

கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கௌசர் உஸ்மான் கூறுகையில், காலக்கெடுவை (Dead Line) நோக்கி ஓடுபவர்களிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகமாகக் காணப்படுகிறது என்றார்.

எஸ்சி திரிவேதி மெமோரியல் டிரஸ்ட் மருத்துவமனையின் மூத்த மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் அமிதா சுக்லா, "கர்ப்பிணிப் பெண்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்குப் பக்கவாதமும் ஏற்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் இரத்தக்கசிவு பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்" என்று கூறினார்.

மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • முதலாவது இஸ்கிமிக் பக்கவாதம் (ischemic stroke). இரத்தக்கட்டியிலிருந்து தமனி தடுக்கப்பட்டு, இரத்தம் மூளைக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படுகிறது.
  • இரண்டாவது இரத்தக்கசிவு பக்கவாதம் (hemorrhagic stroke) இரத்தக்குழாயின் சிதைவால் ஏற்படுகிறது. இது பெண்களை அதிக தாக்குகிறது. இது அதிக இரத்தபோக்கிற்கு வழிவகுக்கிறது. அதிக இரத்த அழுத்தம் மற்றும் அனீரிசிம்கள் போன்றவற்றை இரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படுகிறது.
  • மூன்றாவது வகை இஸ்கிமிக் தாக்குதல் மற்றும் மினி ஸ்ட்ரோக் என்று அழைக்கப்படுகிறது. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தற்காலிக தடையால் ஏற்படுகிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஆண்டுக்கு 4% அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்.. மருத்துவர் சுரேஷ் குமார் கூறும் ஆலோசனைகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.