வின்செஸ்டர் பல்கலைக்கழகம் 2,500க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்ப்பு உரிமையாளர்கள், பாதுகாவலர்களிடம் ஆய்வை ஒன்றை நடத்தியது. அதில், நாய்களுக்கு அன்றாடம் கொடுக்கப்படும் உணவுகள், அதன் ஆரோக்கியம், பராமரிப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
தங்கள் செல்லப்பிராணியான நாய்களுக்கு இறைச்சி வழங்கப்படுவது குறித்தும், சைவ உணவுகள் வழங்கப்படுவது குறித்தும் கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
இந்த ஆய்வின் முடிவுகள் 'PLOS ONE' என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், நாய்களின் ஆரோக்கியம் பற்றிய கவலை எனப் பல காரணிகள் நாய்களுக்கு உகந்தது அல்லாத உணவுகளை தேர்வு செய்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறைச்சி உணவுகளை விட ஊட்டச்சத்து நிறைந்த சைவ உணவுகள் நாய்களுக்கு ஆரோக்கியமானதாகவும், ஆபத்து குறைந்தாகவும் இருக்கலாம் என அந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: குழந்தை வளர்ப்பில் அதீத கட்டுப்பாடுகள் ஆபத்தில் முடியும்!