ETV Bharat / sukhibhava

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப்பரான சூப்! ட்ரை பண்ணி பாருங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 4:04 PM IST

Soup for Winter: சமையற்கலை நிபுணர் குணால் கபூர், குளிர்காலத்திற்கு பரிந்துரைக்கும் சூப்பரான காய்கறி மற்றும் டேங்கி தக்காளி சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப்பரான சூப்

சென்னை: பொதுவாகக் குளிர்காலம் நம்மைச் சோம்பேறியாக்கி விடுவது மட்டுமில்லாமல், அதிகப்படியான நோய் தாக்குதலையும் தரும். அதிலும் குறிப்பாக நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விடும். ஆகையால் குளிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எளிதாகவும், குளிருக்கு இதமாகவும் மருந்தாகவும் சூப்பர் சூப்களை குடிக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கிரின்லாந்து, ரஷ்யா, கனடா போன்ற பனி அதிகமாக உள்ள நாடுகளில் உள்ள மக்கள் குளிரைத் தாக்குப்பிடிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்களை உணவாக எடுத்துக்கொள்வர்.

குளிர்காலத்தில் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • குளிர்காலத்தில் சூப் குடிப்பதால், சளி, இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளைச் சரிசெய்யலாம்.
  • சூப் குடிப்பதன் மூலம் குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பையும் சரிசெய்யலாம்.
  • மேலும் சூப்களில் நாம் சேர்க்கும் இஞ்சி, மிளகு, பூண்டு போன்றவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
  • சூப்களில் நாம் சேர்க்கும் கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி வகைகளில் இருந்து, உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் புரதங்கள் கிடைக்கும்.

இப்போது சமையற்கலை நிபுணர் குணால் கபூர், குளிர்காலத்திற்குப் பரிந்துரைக்கும் சூப்பரான காய்கறி மற்றும் டேங்கி தக்காளி சூப் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய், 2 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு, 2 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி, 1 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய், 3 தேக்கரண்டி வெங்காயத் தூள், 1 தேக்கரண்டி மாவு, அரை கப் நறுக்கிய முட்டை கோஸ், கால் கப் நறுக்கிய கேரட், அரை கப் வேக வைத்த சோளம், கால் கப் நறுக்கிய குடை மிளகாய், கால் கப் நறுக்கிய பீன்ஸ், அரை கப் துண்டுகளாக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு, ஒரு தளிர் துளசி இலைகள், 1 டீஸ்பூன் ஓரிகனோ, 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ், 1 டீஸ்பூன் தைம், காரத்திற்கேற்ப மிளகு பொடி 1 லிட்டர் தண்ணீர், உப்பு தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து வதக்கி, அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயத் தாள் சேர்த்து ஒரு நிமிடம் கிளரவும். அத்துடன் சிறிது சோள மாவு சேர்த்து பொன்னிறமாகும் வரை கிளரவும். பின் அதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், கேரட், குடை மிளகாய், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் வேக வைத்த சோளத்தையும் சேர்த்து 7 நிமிடங்கள் வதக்கவும். அதில் துளசி இலைகள், ஓரிகேனோ, சில்லி ப்ளேக்ஸ், தைம், உப்பு போன்றவை சேர்த்து காய்கறிகள் நன்றாக வேகும் வரை வதக்கி இறக்கவும். இதன் சூடு தணிந்ததும், இவற்றைக் கூழ் போல் அரைத்து, இவற்றை ஒரு வாணலியில் சேர்த்து அதனுடன் தண்ணீர், உப்பு, மிளகு பொடி போன்றவை சேர்த்துக் கொதிக்கவிடவும். அவ்வளவு தான் சுட சுட சூப்பரான காய்கறி சூப் ரெடி.

டேங்கி தக்காளி சூப் செய்வது எப்படி: ஒரு ஆழமான கடாயில் ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதனுடன் 2 டீஸ்பூன் மல்லி விதைகள், 1 டீஸ்பூன் சீரகம், 1 சிறிய துண்டு இலவங்கப்பட்டை, கருப்பு ஏலக்காய் 5 மற்றும் 2 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, அதனுடன் நறுக்கிய 1 வெங்காயம், 2 டீஸ்பூன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும். அதனுடன் 1 கப் நறுக்கிய கேரட் சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிதளவு மிளகாய்த் தூள், முக்கால் கப் நறுக்கிய தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வரை நன்றாக வேக விடவும். அதன் பின் கூடுதலாகத் தண்ணீர் சேர்த்து, கொத்தமல்லி தழைகள் சேர்த்து வேக வைத்து இறக்கவும். அதன் பின் அவற்றைச் சல்லடை மூலம் வடிகட்டி, சூப்பை தனியாகப் பிரித்தெடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, கொதிக்க வைத்தால் சுடச் சுட டேங்கி தக்காளி சூப் ரெடி.

இதையும் படிங்க: மக்கானாவில் இவ்வளவு நன்மைகளா?... என்னனு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.