கணவர் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என வட மாநிலத்தை சேர்ந்த திருமணமானப் பெண்கள் கர்வா சவுத் எனும் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுவார்கள். அதன்படி இந்த ஆண்டு கர்வா சவுத் பண்டிகை இன்னும் சில நாட்களில் வரவுள்ளது.
இந்த பண்டிகையின்போது, புத்தாடை வாங்கி, மெஹந்தி கலைஞரிடம் கை முழுவதும் மெஹந்தி போட்டுக்கொண்டு பெண்கள் கோலாகலமாக தயாராவார்கள். திருமணமானவர்கள் மட்டும் அல்ல, அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து மகிழ்வார்கள். இதில் முக்கிய இடம் வகிப்பது இந்த மெகந்தி தான்.
சமஸ்கிருதத்தில், மெந்திகா எனும் சொல்லில் இருந்து தான் மெஹந்தி எனும் சொல் மருவி வந்துள்ளது. பண்டைய காலத்தில் அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்த மெஹந்தியில், பல மருத்துவ குணங்களும் இருப்பதாக, முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மெஹந்தி தான் இந்தியர்கள் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாகவும் இருக்கிறது. குறிப்பாகவிழா காலங்களின்போது பெண்களின் மனத்திற்கு மிக நெருங்கிய ஒன்றாகவும் இருந்து வருகிறது.
கரோனா தொற்று காரணமாக, பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் கர்வா சவுத் பண்டிகையை கொண்டாட வெளியே செல்வதை தவிர்த்து, பெண்கள் வீட்டிலேயே தங்களுக்கு மெஹந்தி போட்டுக்கொள்ளலாம்.
கைகளை அலங்கரிக்கும் எளிய டிசைன்களை எவ்வாறு போடலாம் என்பதை கற்பிக்கும் வகையில், கீழே இன்ஸ்டாகிராம் பக்கங்களின் லிங்குகள் சில கொடுக்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு, பிறரது உதவியின்றி தங்களுக்கு தாங்களே மெஹந்தி போட்டு மகிழுங்கள்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">

இதையும் படிங்க: