ETV Bharat / sukhibhava

குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா? - மருத்துவம் சொல்வது என்ன? - மலட்டுத்தன்மை

சிகரெட்டிலிருந்து உள்ளிழுக்கப்படும் புகை ஆயிரக்கணக்கான தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை கொண்டுள்ளது. அதிகம் புகைப்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் குறைவான விந்து எண்ணிக்கையை கொண்டுள்ளனர்.

குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா
குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா
author img

By

Published : Oct 17, 2022, 6:01 AM IST

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா மற்றும் மற்றும் நியூசிலாந்திலுள்ள கருவூட்டல் மருத்துவமனைகள், தங்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்ட ஆண்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. இதன்படி , 2020ம் ஆண்டில் ஐவிஎப் சிகிச்சை மேற்கொண்ட 3 தம்பதிகளில் ஒரு ஜோடி, ஆண் மலட்டுத்தன்மை காரணமாக சோதனை குழாய் குழந்தையை நாடியுள்ளனர். சில ஆண் மலட்டுத்தன்மைகளை தடுக்க முடியாது என்றாலும் ஆண்கள் தங்களின் விந்து எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிப்பதற்கான வழிகளும் உள்ளன.

ஆண்களில் பரவலாக காணப்படும் குறைபாடு என்பது போதிய அளவு விந்தணுக்களின் எண்ணிக்கை இல்லாததே ஆகும். சில நேரங்களில் குறைவான உயிரணு எண்ணிக்கை, உயிரணுக்கள் வேகமாக இயங்காதது, முறையற்ற வடிவம் கொண்ட விந்தணுக்கள் அதிகமாக இருப்பது போன்றவையும் கருவுற முடியாமல் போவதற்கான காரணமாக உள்ளன. பெரும்பாலான நேரங்களில் ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம் அறிய முடிவதில்லை.

40 சதவீதம் மட்டுமே ஆண் மலட்டுத்தன்மைக்கு குறிப்பிட்ட காரணம் கண்டறியப்பட்டு விடுகிறது. இவற்றில், மரபு ரீதியான குறைபாடுகள், தொற்றுகளுக்கு ஆளாவது, விதைப்பையில் காயம் மற்றும் கேன்சர் போன்ற நோய்களின் பாதிப்பால் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படுவது போன்றவை உள்ளன. சில ஆண்கள் விந்தணுவே இல்லாமல் இருப்பது அசூஸ்பெர்மியா (azoospermia) என அழைக்கப்படுகிறது.

இதற்கு பிறவியிலேயே ஏற்படும் குறைபாடு காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் சீரற்ற உடலுறவு, ஆண் உறுப்பு எழுச்சியின்மை போன்றவையும் காரணமாக கூறப்படுகிறது. மிகச்சில ஆண்களில் பிட்யூட்டரி ஹர்மோன் குறைபாடும் இதற்கு காரணமாக அமைகிறது. பிட்யூட்டரி கேன்சர் அல்லது மரபு வழி பிரச்சனைகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.

ஹர்மோன் ஊசிகளின் மூலம் இதனை சாதாரணமாக சரி செய்ய வாய்ப்பு உள்ளது. இது தவிர உடல் பருமன், நீரிழிவு, பணியிடங்களில் வேதிப்பொருட்களை நுகர்தல், மற்றும் வாழ்வியல் காரணிகளான புகைபிடித்தல், போன்றவையும் குறைவான விந்தணு பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது.

ஆண் மலட்டுத்தன்மை உள்ள தம்பதிகள் குழந்தை பெற்றெடுக்க இன்ட்ராசைடோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜக்ஷன் முறையின் மூலம் பெண்ணின் முட்டையை கருவுறச்செய்யலாம். ஐசிஎஸ்ஐ என்றழைக்கப்படும் இந்த முறை ஒற்றை விந்தணுவை நவீன உபகரணங்கள் மூலம் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு முட்டையின் மீதும் செலுத்துவது ஆகும். மாறாக சாதாரண ஐவிஎப் முறையில் ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைய அனுமதிக்கப்படும்.

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியான சமீப அறிக்கையின் படி ஆண் மலட்டுத்தன்மையுடன் அணுகும் தம்பதிகள் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு குறித்தும் ஏஎன்இசட்ஆர்டி (ANZARD) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் மலட்டுத்தன்மையை பெரும்பாலான நேரங்களில் தவிர்க்க முடியாது என்றாலும், சில ஆரோக்கியமான பழக்கங்களின் மூலம் ஆண்கள் தங்களின் விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்ற முடியும். ஒரு விந்தணு முழுமையான வளர்ச்சி பெற 3 மாதங்கள் எடுத்துக் கொள்ளும். உங்கள் விந்தணுக்களை ஆரோக்கியமாக பராமரிக்க 5 வழிகளை காணலாம்.

சிகரெட்டிலிருந்து உள்ளிழுக்கப்படும் புகை ஆயிரக்கணக்கான தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை கொண்டுள்ளது. அதிகம் புகைப்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் குறைவான விந்து எண்ணிக்கையை கொண்டுள்ளனர். புகைபிடிக்கும் பழக்கம் முறையற்ற வடிவம் கொண்ட விந்துக்களின் எண்ணிகையை அதிகரிக்கிறது.

புகைபிடிப்பது விந்தணுவின் டிஎன்ஏவையும் பாதிக்கிறது. இதனால் குழந்தையில் பிறவிக்குறைபாடு, கருக்கலைதல் போன்றவற்றிற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. ஒரு ஆய்வின் படி ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளுக்கு மேல் பிடிக்கும் தந்தையிடமிருந்து பிறக்கும் குழந்தைகளில், இரத்த புற்று நோய்க்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

புகைபிடிப்பதில் பாதுகாப்பான அளவு என்ற ஒன்று நிச்சயமாக இல்லை. உங்களையும் உங்கள் குழந்தையையும் பாதுகாக்க சிகரெட்டை விடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் சிகரெட்டை கைவிட்டபின்னர் விந்து எண்ணிக்கையின் மீதான சிகரெட்டின் பாதிப்பு குறைந்துவிடும்.

அதிக எடையுடையவர்கள் ஆரோக்கியமான எடையுடையவர்களைக் காட்டிலும் குறைவான விந்து எண்ணிக்கையை கொண்டுள்ளனர். அதிக எடையுடன் இருப்பது உடலுறவு மீதான ஆர்வத்தை குறைப்பதோடு, ஆணுறுப்பு எழுச்சியில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதிலும் நல்ல விஷயம் என்னவென்றால் உடல் எடையை குறைப்பது விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

இதே போன்று உடற்பயிற்சிக்காக ஆண்டிரோஜெனிக் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வதும் விந்து உற்பத்தியை குறைக்கிறது. ஆனால் இதன் விளைவு நீண்ட நாட்களுக்கு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கின்றனர். ஸ்டீராய்டுகள் சாப்பிடுவதை நிறுத்தியதிலிருந்து பழைய நிலைக்கு திரும்ப 2 ஆண்டுகள் வரை ஆகலாம்.

ஆணின் கருவுறச்செய்யும் திறன் கஞ்சா, கொகைன், ஹராயின் போன்ற போதைப் பொருட்களாலும், பாதிக்கப்படுகிறது. மதுஅருந்துவது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், மதுபழக்கத்திற்கு அடிமையாகி அதிகமாக மதுஅருந்துவது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாகிறது. 80 வயது 90 வயதுகளிலும் ஆண்கள் தந்தையான செய்திகல் குறிந்து நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அவை மிகவும் அரிதாக நடக்கக்கூடியது மற்றும் ஆபத்தானதும் கூட.

ஆண்கள் வாழ்நாள் முழுவதும் விந்தணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்க முடியும் என்பதால் அவர்கள் வயதான பின்னரும் கருவுறச்செய்ய முடியும். வயதான ஆண்களை விட 40 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு கருத்தரிக்கச்செய்யும் வாய்ப்பு அதிகம். வயதான ஆண்களின் துணைக்கு கருத்தரிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும் விந்தணுக்களின் தரம் வயதுக்கு ஏற்ப குறைகிறது மற்றும் இது கருச்சிதைவு மற்றும் குழந்தைக்கு உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, ஒரு குழந்தை பெற விருப்பம் இருந்தால் அதை தாமதிப்பதை விட விரைந்து செய்வது நல்லது.

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (Sexually transmitted infections), குறிப்பாக சிகிச்சையளிக்கப்படாத கோனோரியா மற்றும் கிளமிடியா, விந்தணுக்களின் தரத்தை குறைத்து விந்தணுக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும். இதனால் விந்தணுக்கள் அவை உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து வெளியேற முடியாது. ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான உடலுறவைப் மேற்கொள்ள முடியும். இது துணைக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளை பரவால் தடுக்ககூடிய வழியாகும்.

ஆணுறைகளைப் பயன்படுத்துவது விந்தணுக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் உங்கள் கருவுறுதலுக்கு சேதம் விளைவிக்கும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் இருப்பதாக நீங்கள் கருதினால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறவும். நீங்கள் எவ்வளவு விரைவாக சிகிச்சை பெறுகிறீர்களோ, அந்தளவிற்கு கருவுறுதல் சம்பந்தமான குறைபாடுகளை குறைக்க முடியும்.

இதையும் படிங்க: இதயம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்! இன்று உலக இதய தினம்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.