ETV Bharat / sukhibhava

"மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம்" என்பது உலகளவிலான பொது சுகாதாரப்பிரச்னை - ஆய்வில் தகவல்! - அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழக ஆய்வு

மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் என்பது உலகளவில் ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளதாக அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

stress
stress
author img

By

Published : Sep 7, 2022, 4:28 PM IST

நியூயார்க்: பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடலிலும், மனதிலும் சில அறிகுறிகள் தென்படும். உடல்வலி, சோர்வு, எரிச்சல், மன அழுத்தம் போன்றவை ஏற்படக்கூடும். மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் என்பது உலகளவில் ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாதவிடாய் சுழற்சிக்கு முன் ஏற்படும் மன அழுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ப்லோ (Flo) என்ற ஹெல்த் செயலி மூலம், 140 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 55 வயதுடைய 2,38,000-க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து இதுதொடர்பாக கருத்துக்கேட்டு, அதனை பகுப்பாய்வு செய்தனர்.

அந்த ஆய்வில், 85.28 விழுக்காடு பேருக்கு அதிகப்படியான பசி முக்கிய அறிகுறியாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 64.18 விழுக்காடு பேருக்கு மன அழுத்தம் அல்லது பதற்றம் ஏற்படுவதாகவும், 57.3 விழுக்காடு பேருக்கு சோர்வு ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

28.61 விழுக்காடு பேருக்கு மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் ஒவ்வொரு மாதமும் ஏற்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இந்த மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது என்றும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற அறிகுறிகள் பொதுவானவை என்பது குறித்து பெண்களிடமும், குடும்பத்தினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இதைச் சாப்பிட்டால் 12 மணி நேரம் வரை பசிக்காது...? அதிசய "நாக்டூன்" கிழங்கு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.