சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டத்திற்குப் பஞ்சம் இல்லை. புத்தாடை அணிந்து, கோவிலுக்குச் சென்று வந்து வீட்டில் பட்டாசுகள் வெடித்தும் விதவிதமான உணவுகள் சமைத்து உண்டும் கொண்டாடுவீர்கள். என்னதான் புத்தாடை அணிந்தாலும் உங்கள் முகமும், கூந்தலும் பொலிவுடன் இல்லை என்றால் நீங்கள் என்னதான் மேக்கப் செய்தாலும் டல்லாகவே தோற்றம் அளிப்பீர்கள். ஆடைகள் கூட உங்கள் அழகை எடுத்துக் காண்பிக்காது. சரி இதற்குத் தீர்வு என்ன? முகம் பொலிவு பெறவும், கூந்தல் பளபளக்கவும் என்ன செய்யலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
வீட்டிலேயே தயார் செய்யும் சில தோல் மற்றும் முக பராமரிப்பு பரிந்துரைகளை இங்கே பார்க்கலாம்: பச்சை பசும்பால் கொஞ்சம் எடுத்து அதில் ஒரு எலுமிச்சை பழச் சாற்றைப் பிழிந்து விட்டு அந்த இரண்டையும் நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். 5 முதல் 10 நிமிடம் வரை மசாஜ் செய்தபின், பப்பாளிப் பழத்துடன் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் தடவிக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு சுமார் 20 முதல் 30 நிமிடம் அதை அப்படியே உலர விட்டுக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். பிறகு கொஞ்சம் ரோஸ் வாட்டரை முகத்தில் தேய்த்துக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டர் உங்கள் தோலில் உள்ள அழுக்கை அகற்றிப் பொலிவு கொடுப்பதற்கு முதன்மையானது என்பதால், இதுபோன்ற பேக்குகளை முகத்திற்குப் போடுவதற்கு முன்பும், பின்னும் ரோஸ் வாட்டரை அப்ளை செய்வது மிகவும் சிறந்தது.
கூந்தலுக்கு ஈசியாக ஒரு மாஸ்க்.. இதைத் தேர்வு செய்யுங்கள்: கூந்தல் பார்க்க பளபளவெனவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இது ஒன்றைச் செய்தாலே போதும். விளக்கு எண்ணெய் ஆமணக்கு எண்ணெய் என்றும் கூறுவார்கள் இதனுடன் தேங்காய் எண்ணை இரண்டையும் சரி சமமாக எடுத்துக் கலந்துகொள்ளுங்கள். முன்னதாக உங்கள் தலை முடியை ஷாம்புவால் சுத்தமாகக் கழுவி அதன் பிறகு இந்த எண்ணெயை உங்கள் முடியில் அப்ளை செய்ய வேண்டும் 15 முதல் 20 நிமிடங்கள் கழிந்த பிறகு தலையை மீண்டும் நன்றாக ஷாம்பு பயன்படுத்திக் கழுவ வேண்டும்.
விளக்கு எண்ணெய் அடர்த்தி கொண்டதால் விரைவில் முடியில் இருந்து அகலாது 2 முதல் 3 முறை நீங்கள் ஷாம்பு பயன்படுத்த நேரிடலாம். பிறகு தலைமை முடியை நன்றாக உலர வையுங்கள். இந்த ஹேர் மாஸ்க் உங்கள் முடியை அழகானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றும்.
இதையும் படிங்க: Diwali Legiyam: இனிப்பு பிரியர்களே அலர்ட்…தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் மட்டும் இல்ல லேகியமும் சேத்து செய்யுங்க.. ஏன் தெரியுமா?