ETV Bharat / sukhibhava

தலைமுறை மறந்துபோன துறவிப் பழம்: இதில் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா? - How do you eat monk fruit

Monk Fruit Health Benefits in Tamil: சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பான துறவி பழத்தைச் சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம் என்பதுதான் முதல் மகிழ்ச்சி தரும் விஷயம். மேலும் இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளைப் பார்க்கலாம்.

துறவி பழம்
துறவி பழம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 4:13 PM IST

சென்னை: மாறிவரும் காலச்சூழலால் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக உணவில் சர்க்கரையைக் குறைப்பது கட்டாயமாகிவிட்டது. ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே பொதுவாக அடிக்கடி வரும். அந்த சூழலில், சர்க்கரையை விட பல மடங்கு இனிப்பான உணவுப் பொருளை சாப்பிட கொடுத்தால் எப்படி இருக்கும்? அது தான் துறவி பழம்.

தெற்கு சீனாவை தாயகமாகக் கொண்ட இந்த பழம், ஆங்கிலத்தில் மாங்க் ப்ரூட் (Monk Fruit) என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பழம் மலைப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. இனிப்பு சாப்பிடனும் அதே வேளையில் நீரிழிவு நோய் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த பழத்தை உண்ணலாம். இந்த அபூர்வ பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க: சீதாப்பழம் வைத்து இப்படி ஒரு ஸ்வீட்டா.? : நாவில் தங்கி நிற்கும் சுவை... இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க.!

துறவி பழத்தின் நன்மைகள்:

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு துறவி பழம் சிறந்தது. ஏனெனில் இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இல்லை. உடல் எடை குறைக்கவும், உடல் எடையை பராமரிப்பதற்கும் துறவி பழம் உதவும். இனிப்பான பழம் என்றதும், நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா என்ற எண்ணம் உதித்திருக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக இந்த பழத்தை சாப்பிடலாம்.

துறவி பழம் இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பான ஆய்வு குறிப்புகள் நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (National Library of Medicine)இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 15 நாட்களில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க.!

துறவி பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இந்த பழத்தில் உள்ள விட்டமின் சி உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த துறவி பழம், உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடைவதை தடுக்கிறது. துறவி பழத்தில் உள்ள மோக்ரோசைடுகள் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

துறவிப்பழம் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். துறவி பழத்திலிருந்து இயற்கையான சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கையான சர்க்கரை, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் இந்த பழத்தினை மக்கள் அதிக அளவில் உட்கொண்டு வந்துள்ளனர். காலப்போக்கில் இதன் சாகுபடியும் குறைந்து, மக்கள் அதிகம் பயன்படுத்துவதும் குறைந்துவிட்டது. உணவே மருந்து என்ற அடிப்படையில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டாலும் அதனுடன் இதுபோன்ற பாரம்பரிய உணவுகள், பழங்கள் காய்கறிகளையும் உட்கொள்வது சிறந்த பலனளிக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: இந்த ரகசியம் தெரிஞ்சா.. இஞ்சி தோலை இனிமே தூக்கி வீச மாட்டீங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.