ETV Bharat / sukhibhava

ஃபேஸ் வாஷ் இனி வீட்டிலேயே ரெடி பண்ணுங்க.. விலையோ குறைவு.! தரமோ நிறைவு.! - Etvbharat tamil

Home made Natural Face wash in Tamil: இரசாயனம் கலந்த ஃபேஸ் வாஷ்களை உபயோகப்படுத்துவதைத் தவிர்த்து விட்டு, வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தக் கூடிய பொருட்களை வைத்தே, ஃபேஸ் வாஷ் செய்யலாம். எப்படின்னு பார்க்கலாமா?

வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் செய்ய டிப்ஸ்
வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் செய்ய டிப்ஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 3:02 PM IST

Updated : Sep 27, 2023, 5:34 PM IST

சென்னை: பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் அடைந்து கிடப்பதை யாருமே விரும்ப மாட்டார்கள் என்பதை கரோனா பெருந்தொற்று காலக்கட்டம் நமக்கு உணர்த்தியது. விடுமுறை நாட்களில், எங்காவது வெளியில் சென்றுவிட வேண்டும் என்று தோன்றும். அதேபோல நாள்தோறும் வேலையின் நிமித்தமாக பலரும் வெளியில் சென்றுதான் வருகிறோம். அவ்வாறு வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பும் போது, முகத்தில் தூசி படிந்து, சருமம் பொலிவிழந்து காணப்படும்.

அதனை அடுத்து கரும்புள்ளிகள், முகப்பருக்கள் ஏற்படும். இதை சரி செய்வதற்காக நாம், அழகு நிலையங்களை நாடி செல்கிறோம். ஏன், கெமிக்கல் கலந்த, காஸ்ட்லியான க்ரீம்களையும், ஃபேஸ் வாஷ்களையும் வாங்கி உபயோகப்படுத்துகிறோம். ஏன்னென்றால் சருமத்தை பாதுகாப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது. சருமத்தைப் பாதுகாக்க இயற்கையிலேயே பல வழிகள் உள்ளன.

சூரிய கதிர்கள், தூசி, காற்று மாசு ஆகியவை நமது முகத்தை பொலிவற்றதாக்கி விடுகின்றன. இதனால் வீட்டிற்கு திரும்பியவுடன் முகத்தை கழுவ வேண்டும். இதற்காக இரசாயனம் கலந்த ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு, வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களைக் கொண்டு நாமே ஃபேஸ் வாஷ் செய்யலாம்.

பால் ஃபேஸ் வாஷ்: இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பாலை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பின்னர் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மென்மையாக்கும். பால் இயற்கையான க்ளன்சர் (Cleanser) என்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தும். இது மட்டுமில்லமால் பால் இயற்கையான மாஸ்ட்ரைசர் (Moisturiser) என்பதால் முகச் சுருக்கங்களையும் நீக்கும்.

தக்காளி ஃபேஸ் வாஷ்: ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு தக்காளியை எடுத்து அதை இரண்டாக வெட்டி, சர்க்கரையில் தேய்த்து, முகத்தில் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். இதை தொடர்ந்து செய்து வரும் போது முகத்தில் ஏற்பட்ட தழும்புகளும், பருக்களும் மறையும். மேலும் முகத்தில் படியும் எண்ணெய் நீங்கி, முகம் பொலிவு பெறும். அது மட்டுமில்லாமல் சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையும் நீங்கும்.

தேன் ஃபேஸ் வாஷ்: ஒரு தேக்கரண்டி தேனுடன், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தேய்த்து, மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து, கழுவினால் முகத்தின் வறட்சி நீங்கி, முகம் ஈரப்பதத்துடன் காணப்படும். தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகப்பருக்கள் வராமல் தடுத்து, முகம் பளபளப்படைய உதவுகிறது.

உருளைக்கிழங்கு ஃபேஸ் வாஷ்: உருளைக்கிழங்கை கழுவி சிறிது சிறிதாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தனியாக ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்து கொள்ளலாம். வெளியில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் உருளைக்கிழங்கு சாற்றை, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து, முகத்தைக் கழுவினால் சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்கும். உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகம் பளப்பளப்படைய உதவுகிறது.

இதையும் படிங்க: Sweet Corn Health Benefits: இதய நோயை தடுக்கும் ஸ்வீட் கார்ன்..! இவ்ளோ நன்மைகளா?

Last Updated : Sep 27, 2023, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.