ETV Bharat / sukhibhava

தீபாவளி பட்டாசு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 7:26 PM IST

How to Identify Green crackers in Tamil: தீபாவளி திருநாள் நெருங்கி உள்ள நிலையில் கடையில் சென்று பட்டாசு வாங்கும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை தெரிந்துகொண்டு வாங்குங்கள்.

Green crackers
Green crackers

சென்னை: பனியில்லாமல் மார்கழியும் இல்லை, பட்டாசு இல்லாமல் தீபாவளியும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பட்டாசை, பார்த்துப் பார்த்து வாங்க வேண்டும். பட்டாசு வாங்கும் போது என்னவெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பார்க்கலாம்.

பட்டாசு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • அரசு உரிமம் பெற்ற கடைகளில் இருந்து மட்டும் பட்டாசுகளை வாங்க வேண்டும்.
  • கிஃப்ட் பாக்ஸ் வெடிகளை பரிசளிப்பதற்காக மட்டும் வாங்குங்கள்.
  • உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடித்த பட்டாசுகளை பட்டியலிட்டு வாங்குங்கள்.
  • சீன பட்டாசுகளை தவிர்த்து, பசுமை பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள்.

சீன பட்டாசை ஏன் வெடிக்கக்கூடாது: சீன பட்டாசுகளில் சிறு அழுத்தம் ஏற்பட்டாலே அவை வெடித்து விடும். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சீன பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட சில்வர் பல்மனெட் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால் வாந்தி, மயக்கம், சில நேரங்களில் உயிரிழப்பு போன்றவை கூட ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

சீன பட்டாசுகளை வெடிக்கும் போது அதிகமான சத்தம் வரும். இதனால் காது சவ்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் தலைவலி உள்ளிட்ட தற்காலிக அசவுகரியமும் ஏற்படலாம். மேலும், இதய நோயாள், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இந்த சீன பட்டாசு ஆரோக்கிய சீர் குலைவை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்படுகிறது.

ஏன் பசுமை பட்டாசுகளை வாங்க வேண்டும்: வழக்கமான பட்டாசுகளை விட பசுமை பட்டாசுகள் சிறந்தவை. மேலும் 30 சதவீதம் குறைந்த அளவிலான காற்று மாசுபாட்டை உருவாக்கும். பசுமை பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் போன்ற அபாயகரமான வேதிப்பொருட்கள் இல்லை. மேலும் பசுமை பட்டாசுகள் குறைவான சத்தத்துடனேயே வெடிக்கும்.

பசுமை பட்டாசு தான் என எப்படி கண்டுபிடிப்பது: பட்டாசு அட்டைப்பெட்டியின் மேல், பட்டாசு உற்பத்தி செய்யப்பட்ட காலம், அவற்றை எவ்வாறு வெடிக்க வேண்டும் முதலிய குறிப்புகள் இருக்கும். அப்படி இருந்தால் அவை இந்தியாவில் குறிப்பாக சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் என புரிந்துகொள்ளலாம். அப்படி எதுவும் இல்லாமல் சீன மொழியில் எழுத்துக்கள் இருந்தால் அவை சீன பட்டாசுகள். மேலும் Made in China என்று இருந்தாலோ அல்லது PRC - people's Republic of China என்று எழுதியிருந்தாலோ அவை சீன பட்டாசுகள் என அடையாளம் கண்டு கொள்ளலாம்.

பசுமை பட்டாசுகள் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் (National Environmental Engineering Research Institute) உருவாக்கப்பட்டவை. பட்டாசுகளின் அட்டைப் பெட்டியின் மேல் பசுமை பட்டாசுகளுக்குரிய சின்னம் (Logo) இடம் பெற்றிருக்கும். பசுமை பட்டாசுகள் SWAS, SAFAL, STAR என மூன்று வகைகளாக உள்ளன. SWAS (Safe Water Releaser) இந்த வகை பசுமை பட்டாசுகளில் மாசுக்கள் 30 சதவீதம் குறைவாக இருக்கும்.

SAFAL (Safe Minimal Aluminium and Safe Thermite Cracker) இந்த வகை பட்டாசுகளில் குறைந்தபட்ச அலுமினியம் இருக்கும். அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் பயன்படுத்தப்படுகிறது. அதிக ஒலி இல்லாமல் குறைந்த ஒலி வெளிவரும். STAR வகை பட்டாசுகளில் பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம் குறைவாக பயன்படுத்தப்படுகிறது.

SWAS, SAFAL, STAR போன்றவற்றை வைத்து பசுமை பட்டாசுகள் என அடையாளம் கண்டு கொள்ளலாம். அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து CSIR NEERI பசுமை QR குறியீடு செயலியைப் பயன்படுத்தி பசுமை பட்டாசுகளை கண்டறியலாம். இனிமேலாவது உயிருக்கு உலை வைக்கும் சீன பட்டாசுகளை தவிர்த்து, பசுமை பட்டாசுகளை வாங்கலாம்.

இதையும் படிங்க: பட்டாசு மகிழ்ச்சி.. பிறருக்கு தொல்லையாகலாமா? சமூக அக்கறை கொள்வோம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.