ETV Bharat / sukhibhava

பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள் - Men's sexual health

நம் அன்றாடம் உண்ணும் உணவுகள் பாலியல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், எந்தெந்த உணவுகள் பாலியல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியவை அல்லது தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு:

how-food-and-drinks-contribute-towards-sexual-health

author img

By

Published : Mar 8, 2021, 6:38 PM IST

Updated : Mar 9, 2021, 3:54 PM IST

முதுமை, சோர்வு, மன அழுத்தம், வேகமான வாழ்க்கை முறை ஆகியவை இல்லற வாழ்க்கையைப் பாதிக்கும் காரணிகளாகும். இது மட்டுமல்லாமல் நமது உணவுப் பழக்கம், உடல்நலக்கேடு உள்ளிட்ட காரணிகளாலும் பாலியல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. இதுபோன்ற சிக்கல்களைச் சமாளிக்க மருத்துவம் மட்டும் போதாது, அதற்காகச் சில உணவுகள், நீராகாரத்தை நம் உணவில் சேர்ந்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக இனிப்பு நீராகாரங்களில் பாலியல் நுகர்வு உற்பத்தி அதிகரிக்கின்றன. ஆனால் அதிகப்படியான இனிப்பு நீராகாரங்கள் நீரிழிவு நோய், பருமன் அதிகரிப்பு, எலும்புருக்கி நோய் உள்ளிட்டவற்றிற்கு வழிவகுக்கின்றன. எனவே பாலியல் ஆரோக்கியத்திற்கு எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கீழே கொடுக்கப்பட்ட சில உணவுகள் பாலியல் ஆரோக்கியத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதேபோல பாலியல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளைத் தவிர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

என்ன சாப்பிட வேண்டும்?

  • பூண்டு

பூண்டு (கார்லிக்) என்பது பழங்காலத்திலிருந்தே சுகாதார நலன்களுக்காகப் பயன்படும் உணவுப்பொருள். அதுமட்டுமல்லாமல் பூண்டு பாலியல் பிரச்சினைகளுக்கு நல்ல பலனைத் தரக்கூடியது. பொதுவாகப் பூண்டு ரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் திறன்கொண்டது. அதனால் உடலில் உள்ள ரத்தம் நீர்த்துப்போய் ரத்த ஓட்டம் மேம்படுகிறது, உடலின் ஆற்றல் அதிகரிப்படுகிறது. அத்துடன் பூண்டின் மருத்துவ குணங்கள் உடலின் பல வகையான தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே பூண்டை வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • குங்குமப்பூ
    குங்குமப்பூ
    பாலியல் ஆரோக்கியத்தில் குங்குமப்பூ

குங்குமப்பூ இயற்கையான பாலுணர்வு உணவாகும். இது பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனை அதிகம் சுரக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான புதுமணத் தம்பதிகள் திருமணத்திற்குப் பிறகு குங்குமப்பூ பால் குடிப்பதைப் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக மனச்சோர்வு உள்ள பெண்களுக்கு குங்குமப்பூ பாலியல் நாட்டத்தை ஏற்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

  • வெண்ணெய் பழம்(Avocado)
    பாலியல் ஆரோக்கியத்தில் வெண்ணெய் பழம்
    பாலியல் ஆரோக்கியத்தில் வெண்ணெய் பழம்

வெண்ணெய் பழங்களில் அதிகளவு ஃபோலிக் அமிலம் உள்ளது. இது புரத வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. இதிலுள்ள வைட்டமின் பி 6 (ஆணின் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து), பொட்டாசியம் (இது ஒரு பெண்ணின் தைராய்டு சுரப்பியை சீராக்க உதவுகிறது), ஆண்கள்-பெண்கள் இருபாலருக்கும் லிபிடோவை (பாலியல் உணர்ச்சி) அதிகரிக்க உதவும்.

  • தர்பூசணி
    பாலியல் ஆரோக்கியத்தில் தர்பூசணி
    பாலியல் ஆரோக்கியத்தில் தர்பூசணி

தர்பூசணியை இயற்கை வயாகரா எனவும் சிலர் அழைக்கின்றனர். தர்பூசணி பாலியல் விருப்பத்தை அதிகரிக்கும் ஆய்வுகள் கூறுகின்றன. இதிலுள்ள சிட்ரூலைன் என்னும் அமினோ அமிலம் ரத்த நாளங்களைத் தளர்த்துகிறது. விறைப்புத்தன்மையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மேலும் பிறப்புறுப்பு செயல்படும் திறனை மேம்படுத்துகிறது.

  • சாக்லேட்
    பாலியல் ஆரோக்கியத்தில் சாக்லேட்
    பாலியல் ஆரோக்கியத்தில் சாக்லேட்

ஜோடிகளுக்கு சாக்லேட் எப்போதுமே காதல் சம்பந்தப்பட்டதாகும். இதன் நுகர்வு லிபிடோவை மேம்படுத்துகிறது. சாக்லேட் செரோடோன் என்னும் ஹார்மோன் சுரக்கப் பயன்படுகிறது. இது சீரான மனநிலையை மேம்படுத்துகிறது.

அதனால் பாலியல் நாட்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக சாக்லேட் பதற்றத்தை அகற்ற உதவுகிறது. சாக்லேட் சாப்பிடும்போது பெண்களின் உடலில் உற்பத்தி செய்யப்படும் எண்டோர்பின்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரிப்பதாக பாலியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  • முட்டை

முட்டைகளில் உள்ள வைட்டமின் பி 5, பி 6 ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இது பாலியல் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும். புரதம் மட்டுமல்லாமல் முட்டைகளில் நல்ல கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. சீரான முட்டை உட்கொள்ளல் உடலாற்றலைச் சீராக வைத்துக்கொள்ளப் பயன்படுகிறது.

  • பழங்கள்

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்ட பல பழங்கள் உள்ளன. அவற்றில் ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி, இளநீர், அத்தி, திராட்சை, மாம்பழம், பப்பாளி, பேரிக்காய், மாதுளை, ராஸ்பெர்ரி உள்ளிட்ட பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

  • காய்கறிகள்

பாலியல் ஆரோக்கியம் தொடர்பான ஆராய்ச்சிகளின் முடிவுகளில் பின்வரும் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கேரட், வெங்காயம், வெள்ளரி, கத்திரிக்காய், கீரை வகைகள் ஆகியவை பாலியல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு, அவற்றின் உணர்ச்சியை அதிகரிக்கவும் செய்கின்றன.

  • கறுப்பு உளுந்து(கறுப்பு கிராம்)

கறுப்பு உளுந்து பாலியல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. இதனை அரைத்து பாலுடன் கலந்து உட்கொள்ளும்போது பாலியல் நுகர்வு சக்தி அதிகரிக்கிறது என பாலியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  • பிற வைத்தியங்கள்

பேரீச்சை, அத்திப்பழங்களை பாலில் ஊறவைத்து சாப்பிடுதல்.

வேர்க்கடலை மற்றும் ஊறவைத்த கிராம்பு உணவில் சேர்த்தல்.

உறங்கும் முன் பாலில் நெய்யுடன் குறைந்த சர்க்கரையை கலந்து குடிப்பது.

நன்கு பழுத்த வாழைப்பழங்களை பால், தண்ணீரில் கலந்து அரைத்து சாப்பிடுவது உங்களில் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

என்ன சாப்பிடக் கூடாது?

  • அதிக மசாலா கலந்த உணவுகள், துரித உணவுகள், நீண்ட நேரம் வறுத்த உணவுகள் உங்களது செரிமான அமைப்பை மட்டும் பாதிக்காது. அவை பாலியல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
  • காஃபின் வேதிப்பொருள் பாலியல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடியதாகும். இது டீத்தூள், காபி தூள்களில் அதிகமாக உள்ளன. எனவே இவற்றை குறைவாகப் பயன்படுத்துவது நல்லது.
  • மோனோசோடியம் குளுட்டமேட் நிறைந்த உணவுகள் உங்கள் பாலியல் உணர்வைக் குறைக்கிறது. இவை பதப்படுத்தப்பட்ட உணவுகளான, நூடுல்ஸ், சிப்ஸ், அதிக நேரம் உறையவைத்து பயன்படுத்தும் உணவுகள் (இறைச்சி, பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் ஜூஸ் வகைகள்)
  • ஆல்கஹால், போதைப்பொருள் நுகர்வு பெரும்பாலும் பாலியல் ஹார்மோன்களைப் பாதிக்கின்றன. அத்துடன் பாலியல் சக்தியைக் குறைக்கின்றன. அதிகளவு ஆல்கஹால் உட்கொள்ளும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதை பல வகையான ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
  • உறவுக்கு முன் இறைச்சி, வெண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ண வேண்டாம்.

இதையும் படிங்க: பீட்ரூட்டில் இவ்வளவு நன்மைகளா?

Last Updated : Mar 9, 2021, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.