ETV Bharat / sukhibhava

இந்த பருவமழையை, ஆரோக்கியமான டீ உடன் ரசிக்கத் தயாரா... - உங்கள் விருப்பம் எது?

இனிமையான இந்த பருவமழைக் காலத்தை, உடலுக்கு ஆரோக்கியமான தேநீர் உடன் அனுபவிக்க, உங்களுக்காக சில தேநீர் வகைகளும், அதன் மருத்துவ பயன்களும், இந்த கட்டுரையில் ஒருங்கே தொகுக்கப்பட்டு உள்ளன.

five-healthy-tea-options-you-can-enjoy-this-monsoon
இந்த பருவமழையை, ஆரோக்கியமான டீ உடன் ரசிக்க தயாரா... - உங்கள் விருப்பம் எது?
author img

By

Published : Jul 9, 2023, 4:39 PM IST

ஹைதராபாத்: மழைக்காலத்தில் ஒரு சூடான தேநீர் உங்களை வசதியாக உணர வைப்பது மட்டுமல்லாமல், அது உங்கள் உடல் வெப்பநிலையை சீராக்கவும் உதவுகிறது. மேலும் பருவ மழைக் காலத்துடன் தொடர்புடைய ஒவ்வாமை மற்றும் சளிக்கு எதிர்வினை ஆற்றுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில், தேநீர் அல்லது நாம் அன்புடன் டீ என குறிப்பிடுவது, சந்தேகத்திற்கு இடமின்றி தேசிய விருப்பமாக மட்டுமல்லாமல், நம் வாழ்வின் குறிப்பிடத்தக்க பகுதியாகவும் விளங்கி வருகிறது.

சூடான தேநீரைப் போல ஆறுதல் தரும் பானம் எதுவும் இல்லை. உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும் பல்வேறு வகையான தேயிலைகளை ரசிக்கப் பருவமழை சரியான காலகட்டமாக உள்ளது. மழைக்காலத்தில் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில தேநீர் வகைகளைப் பற்றி, இனி விரிவாகக் காண்போம்...

Ginger tea
இஞ்சி டீ

இஞ்சி டீ: பருவமழை காலத்திற்கு ஏற்ற சிறந்த பானமாக, இஞ்சி டீ விளங்கி வருகிறது. இது ஒவ்வாமையைத் தவிர்க்கவும், தொண்டையில் ஏற்படும் தொந்தரவில் இருந்து விடுபடவும், ஜலதோஷத்திற்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. கூடுதலாக, மழைக்காலத்தில் அடிக்கடி ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்னைகள் மற்றும் செரிமானத்திற்கு இஞ்சி தேநீர் உறுதுணை புரிகிறது.

Chamomile tea
சாமந்திப்பூ டீ

சாமந்திப்பூ டீ: இந்த தேநீர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் இரண்டையும் கொண்டதாகக் கருதப்படுகிறது. இது மழைக்காலத்தில் ஏற்படும் கடுமையான தோல் பாதிப்புகள் மற்றும் சளி, காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற பல தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில், சாமந்திப்பூ டீ முக்கியப் பங்காற்றுகிறது.

Green tea
கிரீன் டீ

கிரீன் டீ: கிரீன் டீ அருந்துவதால், மனிதர்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த தேநீரில் உள்ள அதிக ஆக்ஸிஜனேற்ற பண்பு, நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மழைக்காலத்தில் அதிக அளவில் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில், இந்த கிரீன் டீ, நமது உடலில் உள்ள மாசுக்களை அகற்றி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Basil/Tulsi tea
துளசி டீ

துளசி டீ: மனித நோய்களுக்கான சிகிச்சைப் பயன்பாட்டில், துளசி இலைகளுக்கான பயன்பாடு, குறிப்பிடத்தக்க அளவினதாக உள்ளது. நீரிழிவு, மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு மற்றும் தலைவலி, சளி மற்றும் இருமல் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் தேநீர் தயாரிக்க துளசி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு உள்ளது, உடலின் நச்சுத்தன்மை செயல்முறையை மேம்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தி, செரிமானம் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும் வகையில் உள்ளது.

புதினா டீ

Peppermint tea
புதினா டீ

புதினா இலைகளில் உள்ள மெந்தால், மற்றும் லிமோனென் உள்ளிட்ட பல அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன, புதினா தேநீர் உட்கொள்வது வயிற்றுப் பிரச்னைகளை போக்குவதோடு, தலைவலி, நாசி நெரிசல் மற்றும் பருவகால ஒவ்வாமை உள்ளிட்டவைகளிலிருந்து விடுபட உதவுகிறது.

இதையும் படிங்க: தக்காளியில் ஆண்மை குறைவுக்கு மருந்தா! ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.