ETV Bharat / sukhibhava

குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பரவல் அதிகரிப்பு.. ஆய்வு சொல்வது என்ன?

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. எத்தனை சதவீதம் பேர் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்? மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன? விரிவாக பார்ப்போம்.

சர்க்கரை நோய் குறித்த ஆய்வு
சர்க்கரை நோய் குறித்த ஆய்வு
author img

By

Published : Mar 12, 2023, 4:30 PM IST

வாஷிங்டன்: கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலினில் இருந்து திசுக்கள் தங்களுக்கு தேவைப்படும் குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே நாம் சர்க்கரை நோய் (நீரிழிவு) என்கிறோம். தற்போதெல்லாம் வயது பேதமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

2 வகைகள் என்னென்ன?: பொதுவாக சர்க்கரை நோயை இரண்டாக பிரிக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பே இல்லாதது வகை 1-ஐ சேர்ந்தது. இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படும். உடலுக்கு தேவையான அளவை விட, மிகவும் குறைவான அளவில் இன்சுலின் சுரப்பது வகை 2. இது மரபு ரீதியாக வருவதாக அறியப்படுகிறது.

குழந்தைகளுக்கு பாதிப்பு: இந்நிலையில் அமெரிக்காவில் செயல்படும் வேக் ஃபாரஸ்ட் மருத்துவ பல்கலைக்கழகம் (Wake Forest University School of Medicine) நடத்திய ஆய்வில், சர்க்கரை நோயின் வகை 1 மற்றும் வகை 2 ஆகியவற்றால் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹிஸ்பானிக் (ஸ்பானிஷ் மொழி பேசுவோர்) குழந்தைகள், ஹிஸ்பானிக் இல்லாத கறுப்பின குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு சர்க்கரை நோய் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் அதிகரிப்பு: இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக கடந்த 2000ம் ஆண்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் உதவியின்படி, வேக் ஃபாரஸ்ட் மருத்துவ பல்கலைக்கழகம் பல்வேறு ஒருங்கிணைப்பு மையங்களை உருவாக்கியது. பின்னர் 2002ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள 18,000 பேர் வகை 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

மேலும் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 5,200 பேர் வகை 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 2017-18ம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 22.2 சதவீதம் பேர் வகை 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதும், 17.9 சதவீதம் பேர் வகை 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. 17 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் வகை 1 சர்க்கரை நோய் பாதிப்பு 2 சதவீதமும், வகை 2 சர்க்கரை நோய் 5.3 சதவீதமும் உயர்ந்தது தெரியவந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

10 வயதை சேர்ந்தவர்கள் வகை 1 சர்க்கரை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதும், 16 வயதை எட்டியவர்கள் வகை 2 சர்க்கரை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வகை 1 சர்க்கரை நோயானது குளிர் வாட்டி வதைக்கும் ஜனவரி மாதம் அதிகளவில் பரவியுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பகல் நேர மாறுபாடு, வைட்டமின் டி குறைபாடு, வைரஸ் தொற்று அதிகரிப்பு இதற்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர். வகை 2 சர்க்கரை நோய் ஆகஸ்ட் மாதங்களில் அதிகளவில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

அபாயத்தில் இளைஞர்கள்: இதுதொடர்பாக மருத்துவர் வேகன் நெச்சட் கூறுகையில், "சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் அபாயத்தில் அவர்கள் உள்ளனர். உடல்நலத்தில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம். நோய்க்கான காரணிகளை அறிய இந்த ஆய்வு பெருமளவில் உதவியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நிச்சயம் உதவும்" என்றார்.

இதையும் படிங்க: ஹைவே ஹோட்டல்களை கண்டு இனி அச்சம் வேண்டாம்.. சகல வசதிகளோடு புதிய திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.