ஜெனீவா : உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) திங்கள்கிழமை (ஜூலை 13) காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்திக்கையில், டெல்டா வகை கோவிட் வைரஸ்கள் குறித்து மக்களுக்கு எச்சரித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “டெல்டா வகை வைரஸ்கள் தீவிரமாக பரவிவருகின்றன. உலகளவில் கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
10 மாதங்களுக்கு பிறகு மரணங்களும் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த வைரஸ் 2020ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுக்க பரவியுள்ளது. தற்போதுள்ள நிலையில் தீப்பிடித்து எரிவது போன்ற ஆபத்தில் நாம் உள்ளோம்.
ஆகவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது” என்றார்.
உலக நாடுகளை பொறுத்தவரை டெல்டா வகை வைரஸ்கள் தீவிரமாக பரவிவருகின்றன. இந்த வைரஸை எதிர்கொள்ளும் வகையில், பிரான்ஸ் நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கிடையில் இங்கிலாந்து ஜூலை 19ஆம் தேதி வரை அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது.
இதையும் படிங்க : இன்னும் 20 நாள்களில் டெல்டா பிளஸ் பரிசோதனைக்கூடம் : மா.சுப்பிரமணியம் தகவல்